உள்நாட்டு செய்தி
கிறிஸ்து இயேசு உயிர்தெழுந்தார்…அல்லேலூயா
உலகலாவிய கிறிஸ்தவர்கள் இன்று (04) பாக்கா எனப்படும் உயிர்த்த ஞாயிறு பண்டிகை கொண்டாடுகின்றனர்.
கடந்த 40 நாட்களாக ஜெபத்திலும், ஒருதலிலும், தபித்திருந்தும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுஸ்டித்தனர்.
மனுஷகுமாரன் பாவிகளான மஷசர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேதாகமத்தில் சொல்லப்பட்டபடி இது போன்றதொரு நாளில் நடந்தது.
அன்று இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குள் சென்று தேடிய பெண்களுக்கு தேவத்தூதனால் இவ்வாறு சொல்லப்பட்டது: அதாவது உயிர்த்தெழுந்தவரை மரித்தோரிடத்தில் தேடுவதென்ன? என வினவப்பட்டது.
“இயேசு மரணத்தை வென்றார்…அவர் உயிருடன் இருக்கிறார்” என தேவத்தூதன் சொல்லியதை எண்ணி அந்த பெண்கள் அச்சரியமும் மகிழ்ச்சியையும் அடைந்தார்கள்.
எனவே அவ்வாறு உயிர்த்த இயேசுவை இனியும் கல்லறையில் தேடாமல் எமது மனங்களில் தேடி கிறிஸ்த்து இயேசுவின் சிலுவை மரணத்தையும், உயிர்ப்பையும் இந்த நாளில் தியானிப்போமாக….