உள்நாட்டு செய்தி
புத்தாண்டில் இசைநிகழ்ச்சி,களியாட்டத்திற்கு அனுமதி இல்லை.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டையொட்டி இசை நிகழ்ச்சிகள் , களியாட்டம் மற்றும் கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்காதிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் ஒன்றுகூடுவதை மேலும் மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகளை அவ்வாறே பின்பற்றி குடும்பத்தாருடன் புத்தாண்டை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.