உள்நாட்டு செய்தி
இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு சைனபார்ம் தடுப்பூசி
சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபார்ம் கொவிட் – 19 தடுப்பூசியை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.சீன அரசாங்கத்தின் நன்கொடையாக 6 இலட்சம் தடுப்பூசிகள் நாளை கிடைக்கவுள்ளன.
அதற்கமைய இலங்கையில் தொழிலுக்காக வருகை தந்துள்ள 4500 சீன பிரஜைகளுக்கு முதற்கட்ட Sinopharm தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் , விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
அத்துடன் கொவிட் -19 தடுப்பு திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 903,467 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.