Sports
கிரிக்கெட்டில் பரம எதிரிகள் மீண்டும் கிண்ணத்தை கைப்பற்ற மோதல்

தென்னாபிரிக்க லெஜண்ட் அணிக்கு எதிரான நேற்றைய (19) இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது.
இதற்கமைய இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நாளை (21) மும்பையில் இடம்பெறும் வீதி பாதுகாப்பு வேல்ட் சீரிஸ் இறுதி போட்டியில் இலங்கையணி மோதவுள்ளது.
நேற்றைய (19) போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா லெஜண்ட்ஸ் அணி இருபது ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.
இந்த இலக்கை நோக்கி பதிலளித்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.