Sports
இங்கிலாந்திடம் பெற்றதை திருப்பி கொடுத்த இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிராக அஹமதாபாத்தில் இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
இதற்கமைய 5 போட்டிகளை கொண்ட T20 தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது.
நேற்று (14) இரவு நடைபெற்ற 2 ஆவது T20 போட்டியில் நாணய சுழற்றியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது.
அதற்கமைய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் ரோய் பெற்ற அதிகூடிய 46 ஓட்டங்கள் உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணியின் பந்து வீச்சில் வோசிங்டன் சுந்தர் மற்றும் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு 165 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, அணித் தலைவர் விராத் கோலி ஆட்டமிழக்காமல் பெற்ற 73 ஓட்டங்கள் உதவியுடன் போட்டியில் வெற்றிப்பெற்றது.
73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் பந்து வீச்சில் சேம் கரன், கிறிஸ் ஜோடன் மற்றும் ஆதில் ரசிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக 32 பந்துகளில் 56 ஓட்டங்களை விரைவாக பெற்ற இசான் கிசான் தெரிவானார்.
3 ஆவது T20 போட்டி இதே மைதானத்தில் நாளை (16) இடம்பெறவுள்ளது.