உள்நாட்டு செய்தி
நீதிமன்றம் வரும் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக உரிய நேரத்தை வழங்க வேண்டும் – நீதியமைச்சர்

நீதிமன்றங்களுக்கு வருகை தரும் மக்கள் பல்வேறு சிரரமங்களுக்கு உட்படுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வழக்குகளுக்காக வருகை தரும் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக உரிய நேரத்தை வழங்கி வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் தேசிய அதிகார சபையினால் அதன் சட்டங்கள் மற்றும் முறைகள் தொடர்பாக உயர் பொலிஸ் அதிகாரிகளை அறிவுறுத்தும் வேலைத்திட்டம் அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இடம்பெற்றது.
நியாயத்தை பெற்று கொள்ளும் செயற்பாட்டை வெற்றிப்பெறச் செய்வதற்காக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.