Sports
கெரபியன் தீவுகளில் சூராவளி,இலங்கயை அள்ளிச் சென்றது
இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.
ஏற்கனவே 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருந்த மேற்கிந்திய தீவுகள் நேற்றைய போட்டியில் வென்று வைட் வோஸ் செய்துள்ளது.
இலங்கை நேரப்படி நேற்றிரவு (14) நடைபெற்ற 3 ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியை கைப்பற்றிய மே.தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டமிழக்காது வனிந்து ஹசரங்க பெற்ற 80 ஓட்டங்கள் மற்றும் அசேன் பண்டார பெற்ற 55 ஓட்டங்கள் உதவியுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மே.தீவுகள் அணியின் பந்து வீச்சில் ஹொசேன 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 275 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலளித்த மே.தீவுகள் அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 276 ஓட்டங்களை பெற்று வெற்றி கனியை ருசித்தது.
அந்த அணியின் துடுப்பாட்டத்தில் டெரன் பிராவோ 102 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள சுரங்க லக்மால் மாத்திரம் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக டெரன் பிராவோ தெரிவாக தொடர் நாயகனாக சாய் ஹொப் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21 ஆமு; திகதி நொத் சவுண்ட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.