உலகம்
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம்- ஐ. நா
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குட்டரேஸ் தெரிவிக்கும் போது “ உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர பசி மற்றும் மரணத்தின் விளிம்பை அவர்கள் அடைவார்கள் என தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் கால நிலை மாற்றம் வறுமையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மக்களுக்கு உணவளிக்கவில்லை என்றால் மோதலே உருவாக்கப்படுவதாகவே அர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பஞ்சமும் பசியும் உணவு இல்லாததால் ஏற்படவில்லை. அவை மனிதனால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.