உலகம்
தயக்கமின்றி அஸ்ரஸெனெக்காவை செலுத்திக்கொள்ளலாம். -உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல நிறுவனங்கள் பல நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன.
இந்த நிலையில் ஒருசில நிறுவனங்களின் தடுப்பூசிகள் மாத்திரமே வெற்றியளித்து அவசர பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
அவற்றில் முன்னிலையில் உள்ள தடுப்பூசி தான் அஸ்ரஸெனெக்கா.
இது தற்போது பெரும்பாலான நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் இணையததளங்கள் மற்றும் மேலும் பல சமூக ஊடகங்களில் வெவ்வேறுப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
அதுமாத்திரன்றி பக்கவிளைவுகள் சிலவற்றினை அடிப்படையாக வைத்து ஐரோப்பிய நாடுகள் அதனை புறக்கணித்தும் வந்தன.டென்மார்க் நோர்வே ஐஸ்லாந்து இத்தாலி ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்குப் போடப்பட்ட அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் ‘கொவிட்-19’ தடுப்பூசியினால் சிலருக்கு இரத்தம் உறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.எனவே இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஐரோப்பிய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இதனை பயன்படுத்துவதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரத்த உறைவுககும் தடுப்பூசிக்கும் தொடர்பிருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என ஸ்தாபனத்தின் ஆராய்ச்சிக் குழு உறுதியாக தெரிவித்துள்ளது.