உள்நாட்டு செய்தி
தேசியக்கொடியை அபகீர்த்திக்கு உட்படுத்திய முன்னணி இணைய விற்பனை நிறுவனம்.
முன்னனி இணைய விற்பனை நிறுவனமான அமெஸான் இலங்கையின் தேசியக்கொடியுடனான தரைவிரிப்பு மற்றும் பாதணிகளை விற்பனைக்காக பதிவிட்டுள்ளது.
குறித்த தரைவிரிப்பு ஒன்றின் விலை 12 அமெரிக்க டொலர்கள் என்றும் இது இலங்கை ரூபாப்படி சுமார் 2500 ரூபாவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் உள்ளதென தெரிவித்து இணையத்தில் பல விமர்சனங்களும் கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இது குறித்து வெளிநாட்டு அமைச்சு மற்றும் தூதரகங்கள் ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.