உள்நாட்டு செய்தி
மியன்மார் அமைச்சருக்கு விடுத்த அழைப்பு மீளப்பெற வேண்டும் என்கிறார் சஜித்

இலங்கையில் இடம்பெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவை உச்சி மாநாட்டிற்கு மியன்மார் நாட்டின் வௌிநாட்டு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தமை சிக்கலுக்குரியது என்றும் அதனை மீளப்பெறுமாறும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால் மியன்மார் இராணுவமயமாக்கலை எதிர்க்கும் வகையிலான பகிரங்க அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறில்லாவிடின் தற்போதைய மியன்மார் ஆட்சியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.