உள்நாட்டு செய்தி
செல்பி எடுத்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார் ரஞ்சன்

சிறைச்சாலையில் இருந்தவாறு செல்பி எடுத்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வாரங்களுக்கு எவரையும் சந்திக்க முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றாவாளியான இவர் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரை சந்திப்பதற்காக அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ரஞ்சனுடன் செல்பி ஒன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் அங்குணுகொலபெலஸ்ஸ ஒழுக்காற்று மண்டபத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் குறித்த தவறையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.