உள்நாட்டு செய்தி
நாட்டில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன

நாட்டில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 8853 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை நாட்டில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.மொத்தமாக 520 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.