உள்நாட்டு செய்தி
கொஹூவலையில் எரியுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்திற்கு DNA பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

கொஹூவலயில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளங்காண்பதற்காக மரபணு பரிசோதனையை பரிசோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 06 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொஹூவல – ஆசிரி மாவத்தை பகுதியில் தீ விபத்திற்குள்ளாகிய காரொன்றில் இருந்து கருகிய நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டது.
களுபோவில – பாத்திய மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இரவு உணவை பெறுவதற்காக அவர் காரில் நேற்றிரவு பயணித்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.