உள்நாட்டு செய்தி
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகள்

அமைதி நல்லிணக்கம் மகிழ்ச்சிக்கு சிவராத்திரி தினம் ஔியூட்டட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் சிவனின் ஆசீர்வாதம் சமூக பொருளாதார மற்றும் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் என்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு இது பலமான உந்துசக்தி என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகா சிவராத்திரி தின தீப ஔி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஔியூட்டுவதை போன்று சமூகத்தில் அமைதி நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்து கொள்வதற்கும் சிவபெருமான் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியூடாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மகா சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஆன்மீக விமோசனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் உயர்வான நம்பிக்கை.இந் நன்னாளில் இறையருளால் நிச்சயம் ஆன்மீக பலம் பெறுவார்கள் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.மகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.