உள்நாட்டு செய்தி
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை ஜுன் மாதம் வெளியிட நடவடிக்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செயன்முறை பரீட்சையை மே மாதத்தில் நடத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜுன் மாதம் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் உயர் தர வகுப்புக்களை ஜுலை மாதம் தொடங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோட்டை ஆனந்த பரீட்சை நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நன்றி தெரிவித்தார்.