Uncategorized
உலகில் உள்ள இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகின்றது

அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி… ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி… அதுவே சிவராத்திரி என்பார்கள். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
பிரம்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடி தேடிய கதையை அறிந்திருப்போம். அடியையும் காண முடியாமல் முடியையும் காணாமல் தவித்திருந்தார்கள் பிரம்மாவும் விஷ்ணுவும். இவ்வாறிருக்க வியக்கத்க்க வகையில் தீப்பிழம்பாகவும் அக்கினி மலையாகவும் விஸ்வரூபமெடுத்து தரிசனம் தந்தார் சிவன். அதுவே மகாசிவராத்திரி என்று விவரிக்கிறது புராணம்.உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில்
அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை பூஜித்தார். அந்த இரவே சிவராத்திரி நாளாகும். பார்வதிதேவி தவமிருந்து சிவ பெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது சிவராத்திரி தினமாகும். உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான் என்றும் கூறப்படுகின்றது.எனவே மிகவும் மகிமை மிக்க நாளாக போற்றப்படுவது தான் மகா சிவராத்திரி.
மகா சிவராத்திரி அன்று இரவில் ஒவ்வொரு கால பூஜையாகள் நடைபெறும். இரவில் கண்விழித்து ஆலயத்தில் நடைபெறும் பூஜையை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது பல மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது நம்பிக்கை.
ஈசனுக்கு உகந்தது வில்வம். சிவபெருமானுக்கு உரிய மகா சிவராத்திரி நாளில் வில்வம் சார்த்தி சிவலிங்கத் திருமேனியைத் தரிசிப்பதும் அன்றைய சிவபூஜையில் கலந்துகொள்வதும் கண் விழிப்பதும் இந்தப் பிறவிக்கடமையை நிறைவேற்றுவதாக அமையும். கர்மவினைகளையெல்லாம் களையச் செய்து அருளுவார் மகேஸ்வரன் என்று போற்றுகிறார்கள் சிவனடியார்கள்.
“சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதுமில்லை”