உள்நாட்டு செய்தி
புத்தாண்டை முன்னிட்டு இன்றும் விசேட ரயில் சேவைகள் !
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (14) விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மணிக்கும், கோட்டையில் இருந்து காலி வரை இரவு 7.25 மணிக்கும் இரண்டு விசேட ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.