உள்நாட்டு செய்தி
சட்டவிரோதமாக இந்தியா சென்ற இருவருக்கு சிறை !
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந் நாட்டு நீதிமன்றம் 7 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2022ஆம் ஆண்டு திருவாடானை பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவர்கள் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் குறித்த இருவருக்கும் 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து திருவாடானை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.