உள்நாட்டு செய்தி
புத்தாண்டு சமயத்தில் மின் தடை ஏற்படாது !
புத்தாண்டு விழாக் காலங்களில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளில் ஈடுபடாமல் இருப்பதை இலங்கை மின்சார சபை (CEB) நோக்கமாகக் கொண்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன, “அடுத்த சில நாட்களில் மின் தடைகள் ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யப்படாது” என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஏதேனும் எதிர்பாராத மின்தடைகள் ஏற்பட்டால், அவசர அடிப்படையில் அதை திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பண்டிகைக் காலத்துக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கலாநிதி ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.
எனவே, எரிபொருள் மற்றும் மின்சாரம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது,” என்றார்.