உள்நாட்டு செய்தி
75 மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது !

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் நேற்றைய தினம் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.