உள்நாட்டு செய்தி
கரையோர ரயில் போக்குவரத்து பாதிப்பு !
கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த ரயில் இன்று (13) காலை களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.இதன்காரணமாக, கரையோர மார்க்கத்தில் ரயில்களை இயக்குவதில், தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த ரயிலை வழித்தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.