உள்நாட்டு செய்தி
குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
வவுனியா – நெளுக்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றில் இருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாகச் சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதனை அவதானித்துள்ளார். இதனையடுத்து , நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.குறித்த மரணம் தொடர்பில், தடயவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.