உள்நாட்டு செய்தி
மைத்திரியின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் சந்தேகம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றிருப்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் சம்பவத்தை மூடி மறைத்தவர் ஆவார். அவர் விசாரணையை திசை திருப்புவதாக சந்தேகிக்கிறோம். அவர் கூறிய அறிக்கையிலிருந்து தப்பி ஓட முடியாது, ஆனால் அவர் அந்த அறிக்கைகளை மீண்டும் மீண்டும் மாற்றுவதை நாம் காண்கிறோம்.மைத்திரிபால சிறிசேன நாட்டையும் சாப்பிட்டார். ஆட்களை சாப்பிட்டுவிட்டு இப்போது வாந்தி எடுக்க வேண்டியுள்ளது . மைத்திரி நாட்டில் எத்தனையோ பிரச்சினைகளை ஏற்படுத்தி தாய்லாந்திற்கு சென்று விட்டாரோ என அஞ்சுகிறோம். இது ஒரு தப்பிக்கும் உபாயமா என்று தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை உடனடியாக வரவழைத்து சட்டத்தை அமல்படுத்துமாறு சட்ட அமலாக்க முகமைகளைக் கேட்டுக்கொள்கிறோம்.