உள்நாட்டு செய்தி
இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா..! வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளான 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.