உள்நாட்டு செய்தி
இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
இரத்தினபுரி மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.
அவர்கள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புகையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தில் பன்னிப்பிட்டிய மற்றும் பிலியந்தலையைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.