உள்நாட்டு செய்தி
தற்காலிகமாக கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு !
72 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இன்று ஆரம்பிக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்றிரவு நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த கூட்டமைப்பின் இணை இணைப்பாளர் சானக தர்மவிக்ரம, அரச தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.