உள்நாட்டு செய்தி
மூன்று நாட்களுக்கு மதுபானகடைகளுக்கு பூட்டு
மே மாதம் 21 முதல் மே 27 வரை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெசாக் பண்டிகை காலத்தில் மிருகவதை, இறைச்சி விற்பனை மதுபான பாவனை போன்ற செயல்களுக்கு தடைவிதித்து எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வருட அரச வெசாக் விழாவை மாத்தளை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவும் நிறைவு விழாவும் முறையே மாத்தளை தர்மராஜா பிரிவேனா வளாகத்திலும் பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மில்லவன ஸ்ரீ சுனந்தராம ஆலய வளாகத்திலும் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.