உள்நாட்டு செய்தி
பாடசாலையில் மடிக்கணினிகளைத் திருடிய, ஐவர் கைது..!
பேருவளை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த,
இரு மாணவர்கள் உட்பட ஐவர் இன்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 16 வயதுடைய மாணவர்கள் இருவரும் மற்றும் பாணந்துறை, பாதுக்க பிரதேசங்களில் வசிக்கும் மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாடசாலையின் வகுப்பறை உடைக்கப்பட்டு மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக,
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் போது குறித்த மாணவர்களால் திருடப்பட்ட மடிக்கணினிகள் பாதுக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,
சந்தேக நபர்கள் ஐவரும் பேருவாளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.