உள்நாட்டு செய்தி
கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்
இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைய துணைநில் வைப்பு வசதி விகிதத்தை 8.50 சதவீதமாக 50 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், துணைநில் கடன் வசதி விகிதத்தை இலங்கை மத்திய வங்கி 9.50 சதவீதமாக 50 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.