உள்நாட்டு செய்தி
477 பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான,விசாரணைகள் பூர்த்தி..!
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் வழங்குவதற்கு, அறிமுகம் செய்யப்பட்ட 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 477 முறைப்பாடுகளின் விசாரணைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி மாதம் 4 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 1,077 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றில் 42 முறைப்பாடுகள் தொடர்பில், நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 8 முறைப்பாடுகள் மத்தியஸ்த சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 550 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று முறைப்பாடுகள் வழங்க முடியாத சிறுவர்கள் மற்றும் பெண்கள் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இரகசியமாக முறைப்பாடுகளை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .