உள்நாட்டு செய்தி
களனி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சுகவீனத்தினால் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இன்று காலை சுமார் 150 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தின் முன் திரண்டனர்.பல்கலைக்கழகத்தில் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு மரணமடைந்தார் .பாதிக்கப்பட்ட மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வசதியோ அல்லது ஏனைய வாகனங்களோ பல்கலைக்கழக வளாகத்தில் இல்லாத காரணத்தினால் குறித்த மாணவன் தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.