உள்நாட்டு செய்தி
பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் ஒருவேளை உணவு!
பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் ஒருவேளை உணவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை இந்த காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்கு அரசாங்கத்தினால் 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், போஷாக்கு மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் உணவு முறையை உயர் மட்டத்தில் பேணுவதற்கு கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்தியுள்ளது.இதன்படி 9,134 அரச பாடசாலைகளிலுள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கும் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கும் இந்த இலவச உணவு வழங்கப்படவுள்ளது.அதன்படி, இந்த வருடம் பாடசாலை உணவுத் திட்டத்தின் கீழ் 16 இலட்சம் மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கும் அரசாங்கம் நேரடியாக 16.6 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.