உள்நாட்டு செய்தி
மது உற்பத்தி குறைந்துள்ள போதும் கலால் திணைக்களம் வருமானம் அதிகரிப்பு!
கலால் திணைக்களம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 38.5 வீதம் வருமானத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மது உற்பத்தி 657,000 லீற்றரால் குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.“விலை அதிகரிப்பின் காரணமாக உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. ஜனவரி 2023 உற்பத்தியை எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு ஜனவரியில் உற்பத்தி 657,000 லிட்டர் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வருவாயில் 38% அதிகரிப்பை எட்ட முடிந்தது. பெப்ரவரி 2024. மார்ச் மாதத்தில் சுமார் 30% வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.