உள்நாட்டு செய்தி
பதுளை வைத்தியசாலை, போதனா வைத்தியசாலையாக மாற்றம்
பதுளை வைத்தியசாலை நேற்று முதல் மருத்துவ பீடத்துடன் இணைந்து போதனா வைத்தியசாலையாக மாறியுள்ளது.நிமல் சிறிபால டி சில்வா அறக்கட்டளையினால் புதிதாக 50 மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கி புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு பதுளை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, ஊவா பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி ஜயந்த பலவர்தன, உபவேந்தர் பேராசிரியர் கோலித பண்டார விஜேசேகர மற்றும் அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.