உள்நாட்டு செய்தி
ஹட்டன் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை !
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (25) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.திங்கட்கிழமைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்படுமென மத்திய மாகாண ஆளுநரின் செயளாளர் மடஹபொல தெரிவித்துள்ளார்.