உள்நாட்டு செய்தி
சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு !
புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை சடுதியாக அதிகரித்துள்ளது.அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 20 முதல் 25 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 255 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை தற்போது 275 ரூபாவிலிருந்து 280 ரூபா வரை அதிகரித்துள்ளது.அண்மைய நாட்களில் சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையின் தாக்கத்தினால் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.