உள்நாட்டு செய்தி
வட்டுக்கோட்டை இளைஞர் கொலை – ஐந்தாவது சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி இன்று அடையாளம் காண்பித்துள்ளார்.யாழ்ப்பாணம் – பொன்னாலையில் 24 வயதான இளைஞர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் ஐந்தாவது சந்தேகநபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.இதன்போது, மேற்கொள்ளப்பட்ட அடையாள அணிவகுப்பில், ஐந்தாவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி நீதிமன்றில் இன்று அடையாளம் காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, ஏனைய ஐந்து சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.