உள்நாட்டு செய்தி
இலங்கை மக்களிடம் சீனி பாவனை வெகுவாக அதிகரிப்பு…!
இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட,
மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை உட்கொள்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உலக சுகாதார ஸ்தாபனம் வருடத்திற்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சீனியின் அளவை 13 கிலோ என சிபாரிசு செய்த போதிலும்,
இலங்கையர் ஒருவர் வருடாந்தம் மூன்று மடங்கு சீனியை அதாவது 39 கிலோ சீனியை உட்கொள்வதாக தெரியவந்துள்ளதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதிகளவு சீனி பாவனையால் இலங்கையில் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக டொக்டர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.