உள்நாட்டு செய்தி
இந்தியாவிலிருந்து மில்லியன் கணக்கில் முட்டை இறக்குமதி
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்நாட்டு முட்டைகள் என விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் அண்மையில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் இடப்பட்டுள்ள முத்திரையை அழித்து உள்நாட்டு முட்டைகள் என விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக உள்நாட்டு முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.