உள்நாட்டு செய்தி
புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட பிறகு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்க நேரிட்டதாக தகவல் வெளியானது.
93 பயணிகளுடன் இன்று அதிகாலை 01.13 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட UL 173 என்ற விமானம் மீண்டும் தரையிறங்கியுள்ளது.
மீண்டும் அதிகாலை 01.55க்கு விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.