உள்நாட்டு செய்தி
வெடுக்குநாறிமலை விவகாரம் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்
வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரின் அராஜகத்தை நிறுத்தகோரியும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்ய கோரியும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் போராட்டத்தில் கலந்துகொண்டு வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.