உள்நாட்டு செய்தி
6 வயது சிறுமி கிணற்றில் விழ்ந்து உயிரிழப்பு..!
புத்தளம் – மதுரங்குளி பகுதியில் சிறுமி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்
நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது குறித்த சிறுமி கிணற்றில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.