உள்நாட்டு செய்தி
பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் !
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உட்பட 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு மேலதிகமாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கல்கிஸ்ஸை பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த எம்.எஸ்.தெஹிதெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ.பியசேகர களுத்துறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.
அத்துடன் தென் மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.சீ.மெதவத்த, பயிற்சி மற்றும் உயர் பயிற்சிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.