உள்நாட்டு செய்தி
பஸ்ஸில் இருந்து வீழ்ந்து மூதாட்டி பலி !
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் இருந்து வீழ்ந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பொடிமெனிக்கே என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூதாட்டி பஸ்ஸில் ஏறி பின்புற ஆசனம் ஒன்றில் அமர சென்றபோது பின்புற கதவால் வெளியே வீழ்ந்துள்ளார்.
காயமடைந்த மூதாட்டி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.