உள்நாட்டு செய்தி
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய், 07 சதம் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 45சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 02 சதம், விற்பனை பெறுமதி 400 ரூபாய் 75சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 59 சதம், விற்பனை பெறுமதி 354 ரூபாய் 41 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 01 சதம், விற்பனை பெறுமதி 342 ரூபாய் 16 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 222 ரூபாய் 68 சதம், விற்பனை பெறுமதி 232 ரூபாய் 64 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 208 ரூபாய் 12 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 12 சதம்.
பஹ்ரேன் தினார் 815 ரூபாய் 05 சதம், குவைட் தினார் 999 ரூபாய் 51 சதம், கட்டார் ரியால் 84 ரூபாய் 19 சதம், சவூதி அரேபிய ரியால் 81 ரூபாய் 86 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 83 ரூபாய் 59சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.