உள்நாட்டு செய்தி
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 1000 ரூபா வரை உயரும்!
தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் 600 ரூபாவிற்கும் சில்லறை சந்தையில் 700 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை சந்தையில் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் கடுமையாக்கியதன் காரணமாக வெங்காய இறக்குமதி நிறுத்தப்பட்டதால், பெரிய வெங்காயத்தின் விலை திடீரெனவும் வேகமாகவும் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் தலையிட்டு இராஜதந்திர ரீதியில் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 1000 ரூபாவாக உயரும் எனவும் பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.