உள்நாட்டு செய்தி
ஹோர்டன் சமவெளியை நோக்கி தீ பரவும் அபாயம் : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை
ஹல்துமுல்ல உடவேரியவத்தையில் இன்று (11) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீ, ஹோர்டன் சமவெளியை நோக்கி பரவும் அபாயம் உள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
உடவேரிய எரிமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ ஹோர்டன் சமவெளி உயர் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கு பரவும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் காற்றுடன் தீ பரவல் தீவிரமடைந்துள்ளதாக அனர்த்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீ பரவுவதைக் கட்டுப்படுத்த வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று ஹோர்டன் சமவெளி பூங்காவிற்குச் சென்றுள்ளதாகவும், தேவைப்பட்டால் இராணுவத்தினரின் உதவியைப் பெறுவதாகவும் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.