உள்நாட்டு செய்தி
மது போதையில் 50 லட்சம் ரூபா பணம் திருட்டு,நண்பன் தப்பியோட்டம்
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தனது நண்பரின் 50 லட்சம் ரூபா பணத்தை நபரொருவர் கொள்ளையிட்டு சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மது போதையில் நித்திரையான நண்பனின் 50 லட்சம் ரூபா பணத்தையே, குறித்த நபர் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக வருகைத் தந்த சந்தர்ப்பத்திலேயே மதுபானம் அருந்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் சந்தேகநபர், பாதிக்கப்பட்ட நபரின் பாடசாலை காலம் முதல் நண்பர் என பொலிஸார் கூறுகின்றனர்.
பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.