உள்நாட்டு செய்தி
4 வயது சிறுவன் விபத்தில்உயிரிழப்பு !
கற்பிட்டி – நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் வீட்டுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது, தனது சிறிய ரக துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்கு சென்றுள்ளார்.இதன்போது வீதியில் பயணித்த லொறி குறித்த சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.